மட்டக்களப்பு மாநகர சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம்(Photos)

Sri Lankan Tamils Batticaloa Sri Lanka Sri Lankan Peoples
By Kumar Dec 27, 2022 10:02 PM GMT
Report

மட்டக்களப்பு மாநகர சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கும் விசேட அமர்வானது இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாநகர முதல்வரினால் 2023ம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், உறுப்பினர்களின் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று இறுதியில் பாதீட்டின் மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.

பாதீட்டின் மீதான வாக்கெடுப்பு

வாக்கெடுப்பின் போது பாதீட்டுக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும், நடுநிலையாக 02 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இரண்டு உறுப்பினர்கள் வெளிநாட்டுப் பயணம் காரணமாக சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம்(Photos) | Batticaloa Municipal Council Submit 2023 Budget

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு 08 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுடன், 2018 முதல் இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டு வாக்கெடுப்புகளில் தோல்வியுறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், மட்டக்களப்பு மாநகரசபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீட்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட மனித நேய செயற்பாடுகளுக்கும் விசேட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநகரசபையின் வட்டார ரீதியான அபிவிருத்திப் பணிகளுக்காக 181 மில்லியன் நிதி ஒதுக்கீடு இம்முறை மாநகரசபைப் பாதீட்டில் ஒதுக்கிடப்பட்டுள்ளதுடன், விசேட செயற்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில், மட்டக்களப்பு மாநகரசபையில் பணிபுரியும் ஊழியர்களின் பிள்ளைகளின் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பிற்கு மாதாந்தம் நிதி ஒதுக்கத்திற்காக பாதீட்டில் உள்வாங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம்(Photos) | Batticaloa Municipal Council Submit 2023 Budget

மாநகரசபையில் பணிபுரியும் ஊழியர்களின் பிள்ளைகள் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படின் மாதாந்தம் 5000 ரூபாவும் மாவட்டத்திற்கு வெளியிலுள்ள பல்கலைக்கழமொன்றிற்குத் தெரிவு செய்யப்படின் மாதாந்தம் 8000 ரூபாவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் பாதீட்டில் உள்வாங்கப்பட்டுள்ளன.

பிள்ளைகளின் பல்கலைக்கழகப் படிப்பு நிறைவுறும் வரை இத்தொகை வழங்குவதற்குரிய ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை மாநகரசபை உறுப்பினர்களுக்கான ஒதுக்கத்திற்கும் மேலாக பொதுவான செயற்பாடுகளுக்காக விசேட நிதி ஒதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி மாநகரசபை உறுப்பினர் கௌரியின் வேண்டுகோளுக்கு அமைவாக பொது நிதியத்தில் இருந்து பெண்கள் நலனசார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக விசேட நிதி ஒதுக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுவர் சிநேக அபிவிருத்திச் செயற்பாடுகள்

மட்டக்களப்பு மாநகர சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம்(Photos) | Batticaloa Municipal Council Submit 2023 Budget

அத்துடன் சிறுவர் சிநேக அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காகவும் விசேட நிதி ஒதுக்கம் மேற்கொள்ளப்படடுள்ளது. பிள்ளைகள் பிறந்து ஓரிரு வயதிற்குள்ளேயே அவர்களின் மூளை வளர்ச்சி அதிவேகமாக இருப்பதன் காரணமாக விசேடமாக இம்முறை ஒன்று இரண்டு வயது குழந்தைகளுக்காக விளையாட்டு வாசிகசாலையொன்றை அமைப்பதற்கான செயற்திட்டமொன்று  உள்வாங்கப்பட்டுள்ளது.

கருவுற்ற தாய்மார் நல்ல விடயங்களைக் கேட்பதற்கான சிறந்த துறைசார்ந்த நிபுனர்களின் நெறிப்படுத்தலுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட காணொளி கருவுற்ற தாய்மாருக்கு வழங்கி அவர்கள் நல்ல ஆரோக்கியமான பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கான செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கான திட்டங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம்(Photos) | Batticaloa Municipal Council Submit 2023 Budget

அத்துடன், மாநகரசபை உறுப்பினர் ரகுநாதனின் பரிந்துரைக்கு அமைவாக மாநகரசபைக்குட்பட்ட பின்தங்கிய பிரதேசங்களின் அபிவிருத்தி கருதி மேலதிக விசேட நிதி ஒதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த விசேட சபை அமர்வில் மாநகர பிரதிமுதல்வர், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், மாநகர பிரதி முதல்வர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US