கிழக்கில் பறிபோகும் தமிழரின் நிலங்கள்: பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகள்
மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதிகளில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் அதிதீவிரமாக பெரும்பான்மை இனத்தவரால் அபகரிக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட புத்த விகாரை ஒன்று மீளவும் நிறுவப்பட்டு நேற்றைய தினம்(05.08.2023) விசேட பௌத்த நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து மாதவன மயிலத்தமடு பகுதிக்கு விரைந்து வந்த பெரும்பான்மை இனத்தவர்களை சேர்ந்த பலருக்கு கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளும் துண்டு துண்டாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு
மாதவனை மயிலத்தமடு பகுதியில் இருக்கும் காணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் கால்நடைக்களுக்காக ஒதுக்கப்பட்ட காணியாக இருக்கின்ற காரணத்தினால், பண்ணையாளர்கள் குறித்த காணி விடயம் சம்பந்தமாக தங்களது பிரச்சினைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
எனினும் மேல் நீதிமன்றம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றங்கள் போன்றவற்றில் தடை உத்தரவு காணப்படுகின்ற போதிலும் நீதிமன்ற தடை உத்தரவை மீறி பெரும்பான்மை இனத்தவர்கள் புத்த விகாரை அமைத்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவது பெரும் சவாலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அண்மையில் மட்டக்களப்பு விஜயம் செய்த பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்கள் அனைவரது கவனத்திற்கு கொண்டு சென்றும் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய குடியேற்றம் இன்றுவரை இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தொடர்ச்சியாக இந்த நிலை இடம்பெருமையானால் ஒரு இன முறுகளை ஏற்படுத்த கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் பண்ணையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |















விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
