மட்டக்களப்பு - பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளரின் இடமாற்றத்தை எதிர்த்து போராட்டம்
மட்டக்களப்பு - பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யக் கூடாது என பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னால், கல்விச் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டமானது, இன்று (10.04.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, "நேர்மையான அதிகாரியை இடம் மாற்றாதே, எமது பிள்ளைகளின் மீது அக்கறைகாட்டும் அதிகாரியை இடம் மாற்றாதே" போன்ற பல்வேறு வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோரிக்கை மனு
இந்நிலையில், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யக் கூடாது என அப்பகுதி கல்விச் சமூகத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறி்த்த கோரிக்கை அடங்கிய மனுவினை கிழக்கு மாகாண ஆளுநரிடம் வழங்குமாறு போராட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர் பாடசாலை அதிபர் ஒருவரிடம் வழங்கியுள்ளனர்.
மேலும், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், என பலர் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |