கண்டி மாநகரசபை ஊழியர்களின் போராட்டம்: பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை
கண்டி மாநகரசபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை எதிர்த்து அனைத்து ஊழியர்களும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, கண்டி மாநகர சபை வளாகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில், கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக அனுமதியின்றி வியாபாரத்தில் ஈடுபடுவதாக கூறப்படும் வர்த்தகர் ஒருவரால் மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
ஊழியர்களின் கோரிக்கை
மத்திய சந்தைப் பகுதிக்கான உள்நுழையும் வீதிக்கு தடை ஏற்படும் வகையில் வைக்கப்பட்டிருந்த பழங்களை அகற்றுமாறு அறிவித்தமையினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், தாக்குதலுக்கு உள்ளான நிர்வாக அதிகாரி தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது மாத்திரமன்றி, கடந்த வாரம் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே, தமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென கோரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |