சத்துருக்கொண்டான் புதைகுழியை தோண்ட கோரி மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

Sri Lankan Tamils Batticaloa Government Of Sri Lanka
By Bavan Aug 22, 2025 10:04 PM GMT
Report

மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் சத்துருக்கொண்டான் தமிழின படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் என பிரேரணை கொண்டுவரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குறித்த படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தலையிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்தி வேண்டி சபையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மட்டு. மாநகர சபையின் 3ஆவது மாதாந்த அமர்வு நேற்று முன்தினம் (21) மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது. 

சத்துருக்கொண்டான் படுகொலை

இதன்போது தமிழரசு கட்சி உறுப்பினர் தயாளன் கௌரி சத்துருக்கொண்டான் படுகொலை நீதிகோரி புதைகுழி தோண்டப்பட வேண்டும் என பிரேரணை ஒன்றை கொண்டுவந்து முன்வைத்தார்.

சத்துருக்கொண்டான் புதைகுழியை தோண்ட கோரி மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம் | Batticaloa Mass Grave Research

இதன்போது அவர், "கடந்த 1990-9-9 சத்துருக்கொண்டான் படுகொலை என்பது இந்த மாவட்டத்தில் பாரிய தமிழின படுகொலை நடந்தேறியது.

குறிப்பாக யுத்த காலப்பகுதிகளிலே எங்களுடைய மாவட்டத்தில் அப்போது இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. அந்த பகுதியில் பனிச்சையடி, திராய்மடு, பிள்ளையாரடி, கொக்குவில் சத்துருக்கொண்டான் கிராமங்களின் மக்கள் இடம்பெயர்ந்து நகரில் தஞ்சமடைந்து முகாம்களில் தங்கியிருந்தனர்.

இவர்கள் பகலில் தமது கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று வரும் நிலையில் 1990-9-9 இன்று மாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் சுற்றிவளைத்து அங்கு இருந்த சிறியோர் தொடக்கம் முதியவர் வரைக்கு 186 பேரை ஒன்றுகூடல் என தெரிவித்து சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு அழைத்து சென்று இராணுவத்தினருடன் ஊர்காவல் படையினர் இணைந்து அங்கு வைத்து இராணுவ முகாமின் தளபதி வர்ணகுலசூரிய என்பவரின் தலைமையில் துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர்.

இந்த படுகொலையின் பின்னர் ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணன் தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்ட விசாரணை குழுவிற்கு தப்பி வந்தவர் உட்பட உயிரிழந்தவர்களின் உறவுகள் பலர் சாட்சியங்கள் அளிக்கப்பட்டு இந்த படுகொலை நிரூபிக்கப்பட்ட படுகொலையாக காணப்பட்டது.

இந்த படுகொலை இடம்பெற்று எதிர்வரும் மாதம் 9ம் திகதி 35 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் இந்த படுகொலைக்கான நீதி இதுவரை மறுக்கப்பட்ட ஒரு பாரிய படுகொலையாக இந்த மாவட்டத்தில் காணப்படுகிறது.

 நினைவேந்தல் தூபி

இருந்தபோதும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தலை அனுஷ்டிக்க அமைக்கப்பட்ட நினைவேந்தல் தூபிக்கு வரும்போது பொலிசார் இராணுவத்தினர் சுற்றிவளைத்து அச்சுறுத்தல் மத்தியில் அதை தாண்டி அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இருந்தபோதும் இப்போது ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தற்போது செம்மணி புதைகுழி, மற்றும் ஊழல் மோசடிகளை அழிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் அதேபோல் ஜ.நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை வந்து செம்மணி சென்று இந்த படுகொலைகளுக்கு உள்நாட்டு பொறிமுறைக்குள் தீர்மானிக்கப்பட வேண்டும் என அறிக்கை விடுத்தார்.

சத்துருக்கொண்டான் புதைகுழியை தோண்ட கோரி மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம் | Batticaloa Mass Grave Research

ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல விஷயங்களை செய்வதாக தெரிவித்தார். இருந்த போதும் இந்த படுகொலையில் நானும் இறந்திருக்க வேண்டியவள் அப்போது எனக்கு 4 வயது அன்றைய தினம் எனது பெற்றோர் சுற்றிவளைப்பில் முதல் ஒருசில மணித்தியாலயத்துக்கு முன்னர் நாங்கள் அங்கிருந்து வெளியேறி நகரிலுள்ள நலன்புரி முகாமிற்கு வந்தபடியால் தப்பிக் கொண்டேன்.

எனவே உண்மை ஒருநாளும் உறங்காது செம்மணி புதைகுழி இன்று தோண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது அதுபோல் சத்துருக்கொண்டான் படுகொலை செய்யப்பட்ட அப்போதைய இராணுவ முகாம் இருந்த இடம் தோண்டப்பட வேண்டும்.

இந்த தீர்மானம் எமது உறுப்பினர்களின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்டு இந்த தீர்மானத்தை ஜனாதிபதி, பிரதமர், ஜ.நா மனித உரிமை ஆணையம், அனுப்பப்பபட்டு நீதி கிடைக்க வேண்டும்” என பிரேரணையை முன்வைத்தார்

இந்த பிரேரணைக்கு சபையில் இருந்த முழு உறுப்பினரது ஆதரவு வழங்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலை 35ஆவது ஆண்டு நினைவு தினத்தையிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர். 

மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US