மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை ஆர்ப்பாட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
மட்டக்களப்பு(Batticaloa) - மயிலத்தமடு மாதவனை பிரச்சினை தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதியின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் - மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்படடிருந்தது.
வழக்கு விசாரணை
இதன்படி வழக்கு விசாரணை நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கெள்ளப்பட்டது.
இந்நிலையில், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையானது எதிர்வரும் ஜூலை மாதம் 10ம்திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |