மட்டக்களப்பு மாவட்ட வெள்ளிமலை சித்தி விநாயகர் ஆலய கொடியேற்றம்
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இளைஞர் விவசாயத்திட்டக் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி வாய்ந்ததும், சிறப்பு வாய்ந்ததுமான வெள்ளிமலை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழாவின் கொடியேற்றம் இடம்பெற்றுள்ளது
குறித்த நிகழ்வானது நேற்று (01.06.2024) நடைபெற்றுள்ளது.
திருவிழா பத்து நாட்கள் இடம்பெற்று எதிர்வரும் 10ஆம் திகதியன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
புனரமைப்பு
திருவிழாக் காலங்களில் கிரியைகள் யாவும் சிவ ஸ்ரீ விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றன.
கடந்த யுத்த காலத்தில் முற்றாகச் சேதமடைந்திருந்த இவ்வாலயம் தற்போது முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த வருடம் மஹாகும்பாபிசேகம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த ஆலயத்தில் இவ்வருடத்திலிருந்துதான் முதலாவது மஹோற்சவத் திருவிழா
ஆரம்பித்துள்ளது. இதனை முன்னிட்டு கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளமை
சிறப்பம்சமாகும்.