சட்டவிரோத செயலில் ஈடுப்பட்ட இருவர் கைது!
மட்டு வவுணதீவில் 50 மதுபான போத்தலுடன் ஒருவரும், சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் என இருவரை வவுணதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் 50 மதுபானப் போத்தல்களை மோட்டார்சைக்கிளில் எடுத்து சென்ற ஒருவரும், அனுமதி பத்திரத்தை மீறி உழவு இயந்திரத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் என இருவரை இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலையில் கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி (Nishantha Appugami) தெரிவித்துள்ளார்.
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று அதிகாலை மட்டக்களப்பு நகரில் இருந்து வவுணதீவு பிரதேசத்திற்கு மோட்டர் சைக்கிள் ஒன்றில் 50 மதுபான போத்தல்களை வியாபாரத்துக்காக எடுத்துச் சென்ற வியாபாரி ஒருவரை வவுணதீவு வலையிறவு பாலத்தில் வைத்து கைது செய்ததுடன் மதுபானங்கள் மற்றும் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன் வாழைக்காடு பிரதேச ஆற்றில் அனுமதிப்பத்திரத்தை மீறி உழவு இயந்திரத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரையும் கைது செய்ததுடன் உழவு இயந்திரம் ஒன்றைம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இவ் இரு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்தவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 11 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
