மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நருக்குள் நுழையும் பிரதான இடங்களில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஏப்ரல் 21 தாக்குதல் நடாத்தப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டமும் இலக்கு வைக்கப்பட்டதன் காரணமாகவும் நாளை குறித்த தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படும் நிலையிலும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், சந்தேகத்துக்குரிய வாகனங்கள் நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதேபோன்று இராணுவத்தினரும் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.






3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri