மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள செலவு நிதி அறிக்கையினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சு,நீதி அமைச்சுக்கு அனுப்பிவைக்குமாறு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.
குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
செலவு நிதி அறிக்கை
களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஸப்னா ஸிராஜினால் இன்றை வழக்கு(23) விசாரணைகள் எடுத்துகொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி முபாறக் முகஸம் உட்பட சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
கடந்த 11-09-2025அன்று நீதிமன்றில் கொழும்பு பிரதம சட்டவைத்திய அதிகாரியினால் சமர்பிக்கப்பட்டிருந்த செலவு நிதி அறிக்கை தொடர்பில் மேலதிக அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளதா என்பது தொடாபில் இன்று ஆராயப்பட்டுள்ளது.
செலவு நிதி அறிக்கையினை ஏற்றுக்கொண்ட களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் அதனை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக நீதி அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும் அனுப்புமாறு கட்டளையாக்கியுள்ளனர்.
குறித்த வழக்கானது எதிர்வரும் ஒக்டோர் 09ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.







