அறுவடை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: விவசாயிகள் கவலை தெரிவிப்பு
அறுவடை குறித்து எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக வேறு ஒரு தீர்மானத்தினை எடுத்தமை தொடர்பில் வழிகாட்டல்கள் பின்பற்றப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே விவசாயிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
விவசாய அறுவடை
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரை சிலர் தவறான முறையில் வழிநடத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது விவசாயிகளை பாதிக்கும் எனவும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு சில மாபியாக்கள் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும் அவற்றினை தடுக்கவேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளதாகவும் இதன்போது விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விவசாய அறுவடைக்கு திகதியை தீர்மானித்த நிலையில் மாபியாக்கள் அந்த திகதியை தன்னிச்சையாக மாற்றுவதற்கு அரசாங்க அதிபர் உடன்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தொடர்ச்சியாக இவர்களின் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது எனவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri
