ஏறாவூரில் ஒரேநாளில் போதைப்பொருள் வியாபரிகள் பலர் கைது: போதைப்பொருட்களும் மீட்பு
மட்டக்களப்பு - ஏறாவூரில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் நேற்று முன் தினம் (12.01.2023) ஒரே நாளில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரிகளை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினர், ஏறாவூர் பிரதேசத்தில் பேதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்களை தேடி சுற்றிவளைப்பொன்றை முன்னெடுத்திருந்தனர்.
போதைப்பொருளுடன் கைது
இதன்போது 30 வயதுடைய இரட்டை கொலை தொடர்பான சந்தேகநபர், வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச் பிறப்பிடமாக கொண்ட 26 வயதுடைய பிரபல போதைப்பொருள் வியாபாரி, பிரபல காணி மாபியாவான 40 வயதுடையவர் மற்றும் ஏறாவூரைச் சேர்ந்த 36 வயதுடைவர், 24 வயதுடைய போதை வியாபாரிகளான 5 பேர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 6 கிராம் ஐஸ் மற்றும் 2.6 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.