மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிற்கு சேவைகால நீடிப்பை நிராகரித்த அமைச்சு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் சேவைகால நீடிப்பு கடிதம் மறுக்கப்பட்டதன் காரணமாக தனது சேவையில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
கடந்த 27.09.2023 அன்று சேவைகால நீடிப்பு கடிதம் மறுக்கப்பட்டமை தொடர்பில் பொது உள்நாட்டு அமைச்சு அறிவித்ததையடுத்து இன்றைய தினம் தனது 60 வயதில் ஓய்வு பெறவுள்ளார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கடந்த ஜனவரி 18ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையை பெறுப்பேற்றிருந்தார்.
கால நீடிப்பு கடிதம்
இந்த நிலையில் தனது ஓய்வூதிய காலத்தின் பின்னர் தொடர்ந்து அரச சேவையில் கடமையாற்றுவதற்கு பொது உள்நாட்டு அமைச்சிடம் சேவை கால நீடிப்பு கோரியிருந்தார்.
கால நீடிப்புக்கான அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் அனுப்பபட்டதன் காரணமாக அவர் இன்றுடன் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.





அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
