மாகாண சபை அதிகாரங்களை வழங்க வேண்டியது முன்னரை விடவும் இப்போது அவசியம்: சீ.வீ.விக்னேஸ்வரன்

Ranil Wickremesinghe Wickremesinghe Ranil India C. V. Vigneswaran
By Theepan Sep 28, 2023 05:03 PM GMT
Report

இலங்கையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளை உருவாக்கி அதிகாரங்களை வழங்க வேண்டியது முன்னரை விடவும் இப்போது அவசியம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்தியாவும், நடைமுறைப்படுத்த போவதாக இலங்கையும் தெரிவித்திருந்த நிலையில் அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதால் இந்த விடயத்தில் இந்தியா கரிசனை கொள்ள வேண்டுமென்றும் கோரியுள்ளார்.

13 ஆவது திருத்த நடைமுறையாக்கம் தொடர்பில் யாழிலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்று(28.09.2023) நடாத்திய கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அதிரடி முடிவு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அதிரடி முடிவு

13 வது திருத்தச் சட்டம்

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

''பதின்மூன்றாவது திருத்தச் சட்ட நடைமுறையாக்கம் தொடர்பாக ஐனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் இன்று என்னையும் சந்தித்து கலந்துரையாடி இருக்கின்றனர்.


குறிப்பாக 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற போது அந்தச் சட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை திரும்பப்பெற வேண்டியது மிகவும் அவசியம்.

இதனடிப்படையில் பறிக்கப்பட்ட அதிகாரங்களை தொடர்ந்தும் எப்படி மீள எடுப்பது சம்பந்தமான நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் நீதித்துறைக்கு விழுந்த சம்மட்டியடி: சிறீதரன் எம்.பி காட்டம்

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் நீதித்துறைக்கு விழுந்த சம்மட்டியடி: சிறீதரன் எம்.பி காட்டம்

நிபுணர் குழு தீர்மானம்

அதற்கமைய இன்றும் நாங்கள் தொடர்ந்து பேசி இருக்கின்றோம். கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி இது சம்பந்தமாக விசாரணை செய்வதற்கான அந்தக் குழுவை வர்த்தமானி மூலமாக பிரசுரிப்பதாகச் சொல்லப்பட்டது.

எனினும் அது வெளிவராத நிலையில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு என்று பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்.

மாகாண சபை அதிகாரங்களை வழங்க வேண்டியது முன்னரை விடவும் இப்போது அவசியம்: சீ.வீ.விக்னேஸ்வரன் | Cv Vigneswaran Press Conference

இதனால் எங்களுக்கு தாமதம் ஏற்படுவதனால் இது சம்பந்தமான நிபுணர் குழுவின் ஊடாக எவ்வாறு எடுக்க வேண்டும் என ஆராய்ந்திருக்கிறோம்.

எனினும் ஒரு நிபுணர்கள் குழு தீர்மானித்து அரசாங்கத்துக்கு அறிவுரை வழங்குவது தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கமைய இந்த திட்டத்தில் இனியும் தாமதம் ஏற்படக்கூடாது என்ற காரணத்திற்காக நாங்கள் இது சம்பந்தமாக என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதாக இன்று நாங்கள் பேசிக் கொண்டோம்.

முக்கியமாக இந்தச் சட்டத்தில் இருந்து பறிபோன அந்த அதிகாரங்களை திரும்ப பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது.

நியூயோர்க் சென்ற அமைச்சரின் 20 வயது மகனால் புதிய சர்ச்சை!(Video)

நியூயோர்க் சென்ற அமைச்சரின் 20 வயது மகனால் புதிய சர்ச்சை!(Video)

மாகாண சபையின் அவசியம்

அதனை இந்தியாவும் கருத்தில் எடுத்துக் கொண்டு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இது சம்பந்தமாக இந்தியாவும் தன்னுடைய கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் எங்களுக்கு இருக்கின்றது.

ஆனால் ஜனாதிபதியினுடைய எண்ணங்கள் எவ்வாறு இருக்கின்றது என்பது பற்றி எங்களுக்கு தெரியவில்லை.

எனினும் அவர் தனக்கு பதிலாக இங்கு இருக்கும் ஏனைய அலுவலர்கள் அல்லது அரசியல்வாதிகள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்ற எண்ணமும் இருக்கிறது.

மாகாண சபை அதிகாரங்களை வழங்க வேண்டியது முன்னரை விடவும் இப்போது அவசியம்: சீ.வீ.விக்னேஸ்வரன் | Cv Vigneswaran Press Conference

இந்த 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளை உருவாக்க வேண்டிய அவசியம் எப்பொழுதும் இல்லாததை பார்க்கவும் இப்போது மிக அதிகமாகியிருக்கிறது.

குறிப்பாக தமிழ் மக்களினுடைய சகல அதிகாரங்களும் குறைந்து கொண்டு வருகின்றது.

அரசாங்கத்தின் அனுசரணையோடு தமிழ் மக்களுக்கு எதிரான அல்லது ஏற்றுக் கொள்ள முடியாதவாறு பலவிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட அதிகாரங்களின் அபகரிப்பு என்பன தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

அரசாங்கத்தின் கோர முகத்தை வெளிப்படுத்திய நீதிபதி ரி. சரவணராஜாவின் பதவி விலகல்: துரைராசா ரவிகரன் கண்டனம்

அரசாங்கத்தின் கோர முகத்தை வெளிப்படுத்திய நீதிபதி ரி. சரவணராஜாவின் பதவி விலகல்: துரைராசா ரவிகரன் கண்டனம்

இந்தியாவினுடைய கரிசனை

இதற்கமைய, இவற்றை நாங்கள் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களுடைய அதிகாரங்களை பலப்படுத்துவதற்கு முதற்கட்டமாக மாகாண சபைகள் அமைக்கப் பெறுவது அவசியம்.

அதற்குரிய நடவடிக்கைகள் எவ்வாறு எடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக நாங்கள் ஆராய்ந்துள்ளோம்.

மாகாண சபை அதிகாரங்களை வழங்க வேண்டியது முன்னரை விடவும் இப்போது அவசியம்: சீ.வீ.விக்னேஸ்வரன் | Cv Vigneswaran Press Conference

இன்றைய தினம் இவை பற்றி பலவிதமான கோணங்களில் நாங்கள் பேசியும் இருக்கின்றோம். விசேடமாக அரசியல் யாப்பில் எந்தெந்த உறுப்புரைகளின் அடிப்படையிலேயே இவற்றை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் முக்கியமாக 154 ரி (154 T) ஏற்பாடுகளை நாங்கள் பரீட்சித்து பார்த்தோம்.

இதில் முக்கியமாக யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை தலைவியான கோசலை மதனும் இது சம்பந்தமாக தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இதற்கமைய 13-வது திருத்தச் சட்ட நடைமுறையாக்கம் சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அந்த திருத்ததிலிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள பெறுவதற்கு நாங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அரசாங்கத்தினுடைய அனுசரணையை பெற வேண்டும் என்பது பற்றியும், இந்தியாவினுடைய கரிசனையை இதற்கு பெற வேண்டும் என்பது சம்பந்தமாகவும் நாங்கள் கலந்தரையாடியுள்ளோம்'' என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தீவிரமடையும் பௌத்த மயமாக்கல்: ஐ.நாவில் வலியுறுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Video)

இலங்கையில் தீவிரமடையும் பௌத்த மயமாக்கல்: ஐ.நாவில் வலியுறுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Video)

ரணிலை கையாள்வதில் தடுமாறும் ஜூலி சங்: சர்வதேச நிறுவனங்கள் வெளியேறும் ஆபத்து (Video)

ரணிலை கையாள்வதில் தடுமாறும் ஜூலி சங்: சர்வதேச நிறுவனங்கள் வெளியேறும் ஆபத்து (Video)

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US