ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்! அருண் ஹேமச்சந்திரா

Batticaloa Eastern Province Arun Hemachandra
By Kumar Dec 31, 2024 04:10 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் அபிவிருத்தி பணிகளின்போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா(Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(30) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழில் தீவிரமடையும் இந்திய ரோவின் அத்து மீறிய செயற்பாடுகள்

யாழில் தீவிரமடையும் இந்திய ரோவின் அத்து மீறிய செயற்பாடுகள்


அபிவிருத்திக்குழு கூட்டம்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்! அருண் ஹேமச்சந்திரா | Batticaloa District Development Committee Meeting

“மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட 725மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 25மில்லியன் ரூபாய்களாக பிரிக்கப்பட்டு எந்தவித ஒப்பந்த விண்ணப்பக் கோரல்களும் இல்லாமல் முறைகேடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது, அதனையும் மீறி அரசியல் ரீதியாக எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மாவட்டத்தில் இடம்பெற்றதாக கருதப்படும் காணி மோசடிகள், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வனவிலங்கு பிரச்சினைகள், நீர்பாசனம், கனிய வள அகழ்வு, அனர்த்த முன்னாயத்த செயற்பாடுகள், கல்வி, சுகாதாரம், மீன் பிடி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி விடயங்கள், ஏனைய அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அறிவுறுத்தல்

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அறிவுறுத்தல்

ஆலோசனைகள்

 அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திப்பது தொடர்பாக அபிவிருத்தி குழுத் தலைவர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரினால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்! அருண் ஹேமச்சந்திரா | Batticaloa District Development Committee Meeting

சில விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உப குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன், அவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய முடிவுகள் எடுக்கப்படும் என தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழா, முஹம்மட் சாலி நளீம், கிழக்கு மாகாண அரச திணைக்களங்களின் செயலாளர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷனி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்சனி முகுந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய அரச திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அரச ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுமா! அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு

அரச ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுமா! அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US