மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (30.09.2028) இடம்பெற்றது.
முக்கிய விடயங்கள்
இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோர் பங்கேற்றனர்.
கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அபிவிருத்தி குழு தலைவர், அரச நிறுவங்களில் காணப்படும் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும், கிராமிய வீதிகளை அமைத்தல், குடிநீர் வழங்கள், மலசல கூடங்களை அமைத்தல், கிரான் பாலத்தை முன் உரிமையின் அடிப்படையில் எதிர்வரும் வருடத்தில் நிர்மானித்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.













அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
