மட்டக்களப்பு வர்த்தக நிலையங்களில் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் விசேட சுற்றி வளைப்பு (Photos)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையகங்களில், மாவட்ட நுகர்வோர் அலுவல அதிகார சபை அதிகாரிகளால் இன்று(25) விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி கட்டுப்பாட்டு விலைகளுக்கு அதிகமாக முட்டை விற்பனை செய்வதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு பதிவு

வியாபாரிகளுக்கான அறிவிப்பு
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்கின்ற வியாபாரிகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாக குறைந்தது ஒரு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் ரூபா வரை தண்ட பணம் விதிக்க முடியும் என்றும் ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்றும் நுகர்வோர் அலுவலக சம்பந்தமான அதிகார சபை மாவட்ட உதவி பணிப்பாளர் எப்.ஏ அன்வர் சதாத் தெரிவித்துள்ளார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் முட்டை வியாபாரம் செய்கின்ற வியாபாரிகள் அரச கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாக விற்பனை செய்ய வேண்டும். இதனை தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri
