மட்டக்களப்பில் ஒருவாரத்தில் 143 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம்

Death Covid-19 Pcr test Batticaloa district
By Kumar May 05, 2021 04:03 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 நாட்களில் 190 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், ஒருவாரத்தில் 143 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று(05) காலை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது அலையில் 14 நாட்களில் 190 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 143 பேர் கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோவிட் சிகிச்சை நிலையங்கள் முற்று முழுதாக நிரம்பியுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்படும் கோவிட் தொற்றாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளது.


மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 30 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களின் 12பேர் களுவாஞ்சிகுடியிலும், 09பேர் மட்டக்களப்பிலும், 05பேர் செங்கலடி பகுதியிலும், 04பேர் காத்தான்குடியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1173கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இவர்களின் 1020பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.143பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதுவரையில் 10மரணங்கள் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது அலை காரணமாக ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கோவிட் சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி, கரடியனாறு, பெரியகல்லாறு ஆகிய இந்த மூன்று வைத்தியசாலைகளும் 400 நோயாளர்களை பராமரிக்கக்கூடிய வகையில் உள்ளன.இந்த மூன்று வைத்தியசாலைகளும் முற்று முழுதாக நிரம்பிய நிலையில் காணப்படுகின்றன.

இதன் காரணமாக புதிதாக அடையாளம் காணப்படுபவர்கள் வெளி மாவட்ட்ங்களுக்கு அனுப்பவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் 1000கட்டில்களை அதிகரிக்குமாறு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் நூறு கட்டில்களை அதிகரிக்கவுள்ளோம். கோவிட் மூன்றாவது அலையின் காரணமாக ஒட்சிசன் தேவைப்பாடு அதிகளவில் காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்சிசன் சிலின்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்சிசன் திட்டம் இல்லாத காரணத்தினால் ஒட்சிசன் தேவைக்காக மகாஓயா, தெகியத்தன்கண்டிய பகுதிகளிலிருந்து ஒட்சிசனை எடுத்து வரவேண்டியுள்ளது. ஒரு ஒட்சிசன் தொகுதியை நிறுவுவதற்கு 42மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.

அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கோவிட் தொற்றாளர்கள் தீவிரமான நிலையினையடைந்து நியுமோனியாவுக்கு தள்ளப்படும்போது அவர்களைப் பராமரிப்பதற்காக காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை போன்ற வைத்தியசாலைகளில் எச்.யு மற்றும் ஐ.சி.யு ஆகியவற்றினை நிறுவவுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஏழு நாட்களில் அவை செயற்பாட்டுக்குவரும் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US