கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழர் - விசாரணையில் சிக்கிய மோசமான செயல்
கனடாவில் சிறுவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் நகர சபையின் முன்னாள் ஊழியரான தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
65 வயதான சார்லஸ் மாணிக்கம் என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் சமூக மையத்தில் வைத்து சிறுவர்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உடல் ரீதியான காயங்கள்
சந்தேக நபர் மீது பாலியல் ரீதியான மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உடல் ரீதியான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vaughan நகர சபையின் முன்னாள் ஊழியரான சந்தேக நபர், பணியில் இல்லாத போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் ஊழியர் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக Vaughan நகர சபை தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபரினால் எவராவது பாதிக்கப்பட்டிருந்தால் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உதவி செய்த மக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சிவாஜிலிங்கம்
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam