மேய்ச்சல் தரையை மீட்டுதர கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி நான்காவது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் குறித்த போராட்டத்தில் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
நேற்றையதினம் (19.09.2023) தலையில் கறுப்பு துணியை அணிந்தவாறு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த புதன்கிழடை நடைபெற்ற விவசாய கூட்டத்தின் போது மேய்ச்சல் தரை அபகரிக்கப்படுவது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து தங்களது மேய்ச்சல் தரையை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
வாழ்வாதாரத்தினை இழந்த போராட்டம்
தமது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி கடந்த நான்கு தினங்களாக போராடிவருகின்றபோதிலும் இதுவரையில் தமது கோரிக்கையினை தீர்த்துவைப்பதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையென பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த நான்கு தினங்களாக தமது வாழ்வாதாரத்தினை இழந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் தமது பிரச்சினைகளை தீர்த்துவைக்க எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.












தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திடீரென விஜய் டிவி செய்த மாற்றம், கோபத்தில் உள்ளாரா எஸ்.ஏ.சி- இப்படியொரு முடிவு எடுத்தாரா? Cineulagam

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர் Cineulagam
