மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் கோவிட் தொற்றால் மூவர் உயிரிழப்பு
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் கோவிட் தொற்றினால் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 299 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளர் எண்ணிக்கை 11905 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இன்று(15) ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 24 மணித்தியாலத்தில் வவுணதீவில் ஒருவரும். களுவாஞ்சிக்குடியில் ஒருவரும், வாழைச்சேனையில் ஒருவர் உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் 146 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை மட்டக்களப்பில் 109 பேருக்கும், களுவாஞ்சிக்குடியில் 31 பேருக்கும், வாழைச்சேனையில் 14 பேருக்கும், காத்தான்குடியில் 7 பேருக்கும், ஓட்டுமாவடியில் 12 பேருக்கும், கோறளைப்பற்று மத்தியில் 2 பேருக்கும், செங்கலடியில் 37 பேருக்கும், வாகரையில் 32 பேருக்கும், பட்டிருப்பில் 3 பேருக்கும், வெல்லாவெளியில் 16 பேருக்கும், ஆரையம்பதியில் 6 பேருக்கும், கிரானில் 13 பேருக்கும் பாதுகாப்புப் படையினர் 5 பேருக்கும், ஏறாவூரில் ஒருவர் உட்பட 299 பேருக்குத் தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஒருவாரமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர் 200 தொடக்கம் 300 வரையிலானவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
எனவே தடுப்பூசி ஏற்றி விட்டோம் எனத் தேவையற்ற விதத்தில் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டில் முடங்கியிருந்தால் மாத்திரம் இந்த கோவிட் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
ஆகவே பொதுமக்கள் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலைப் பின்பற்றிச் செயற்படுமாறு அவர் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
