விளம்பரப்படுத்திற்காக கூட்டங்களுக்கு வரும் எம்பிக்கள் - சுனில் ஹெந்துநெத்தி
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி கூட்டங்களுக்கு தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக வருகின்றார்கள் என அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் குழப்பங்களை ஏற்படுத்தி அபிவிருத்தி கூட்டங்களின் நேரங்களை வீணடிப்பதாக கூறினார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று மாலை இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முக்கிய விடயங்கள்
இந்த வருடத்திற்கான முதலாவது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில்ஹெந்துநெத்தி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் பூர்த்தியடையாத திட்டங்களை பூரண படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இதேபோன்று நீர்பாசனம்,விவசாயம்,வீதி புரமைப்பு,உள்ளுராட்சிமன்றங்களின் செயற்பாடுகள் என பல்வேறுபட்ட திணைக்களங்களின் செயற்பாடுகள் அவர்கள் முன்னெடுக்கவேண்டிய பணிகள் குறித்து ஆராயப்பட்டது.




சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
கிரீன்லாந்திற்கு படைகளை அனுப்பும் ஜேர்மனி, பிரான்ஸ் - ட்ரம்ப்பிற்கு அழுத்தம் அதிகரிப்பு News Lankasri