மட்டக்களப்பு நீதிமன்றில் அர்ச்சுனா எம்பி உட்பட மூவர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்ட ஹிஜாப் பிரச்சினையை தொடர்ந்து வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட கூற்றுக்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று (12) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.
இந்த வழக்கானது நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரிஸ் உட்பட ஆறு பேருக்கு எதிராகவும், இரண்டு யூடியூப் மற்றும் முகப்புத்தக தளங்களுக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
விசாரணை நடவடிக்கை
நிகழ்நிலைகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கானது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செபஸ்தியான் விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரிஸ் உட்பட இரண்டு பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உட்பட மேலும் இருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இந்தநிலையில் பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தலைமையிலான சட்டத்தரணி பிரதிவாதிகளினால் தங்களுக்கான நீதிமன்ற அழைப்பானை கடந்த சனிக்கிழமை கிடைக்கப்பெற்றதாக மன்றில் தெரிவித்து காரணம் காட்டல்களுக்கான கால அவகாசத்தை கோரியிருந்தார்கள்.
அதன் அடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி காரணம் காட்டலுக்காக வழக்கை ஒத்தி வைத்தும், அன்றைய தினம் ஆறு பிரதிவாதிகளையும் மன்றில் முன்னிலையாகுமாறு குறிப்பிட்டும் நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri