மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு
மட்டக்களப்பு நீதிமன்ற எல்லைக்குள் யுத்தத்தினால் மரணித்த தமிழீழ் விடுதலைப் புலிகளின் நினைவு கூருவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட 5 பேருக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்து கட்டளை ஒன்றை வழங்கியுள்ளது.
கடந்த 19 ம் திகதியில் இருந்து எதிர்வரும் 27ம் திகதி இரவு வரை மட்டக்களப்பு நீதிமன்ற எல்லைக்குள் யுத்தத்தினால் மரணித்த தமிழீழ விடுதலைப் புலிகளினை நினைவு கூருவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் ஒன்றிணைப்பின் கீழ் கிழக்கு மாகாண தலைவர் சிவயோகநாதன் சீலன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ். முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ஞானமுத்து சிறிநேசன் ஆகியோருடன்,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் யோகராசா தர்மிதன், என்பவர்களுடைய தலைமையில் அவர்கள் சார்ந்த உறுப்பினர்களால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் மரணித்தவர்களுக்கு விளக்கேற்றி நினைவு கூர இருப்பதாக நம்பகரமான தகவலின் பிரகாரம், இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதுடன், மீண்டும் தூண்டுகின்ற செயற்பாடு காணப்படுவதால் இந்த நினைவு கூரல் சம்பவம் நடைபெறாமல் தடை உத்தரவு ஒன்றை மேற்குறித்தவர்களுக்கும் அவர்கள் சார்ந்த உறுப்பினர்களுக்கும் எதிராக 1979 ம் ஆண்டின் 15 ம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்ட கோவை (106)1, (106)2, பிரிவின் கீழ் தடை உத்தரவு ஒன்றை கோரி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே.பி. கெட்டியாராச்சி நீதிமன்றில் சமர்பித்தார்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக கடந்த 19; திகதியில் இருந்து 27 ம் திகதி வரை இந்த நினைவேந்தலில் ஈடுபட தடை உத்தரவு பிறப்பித்து கட்டளை ஒன்றை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,மாவீரர் நாளை முன்னிட்டு எதிர்வரும் 21.11.2021ம் திகதி தொடக்கம் 28.11.2021 வரை குறித்த மாவீரர் நினைவு தினத்தை அனுஷ்டிக்கக் கூடாது என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு காத்தான்குடி பொலிஸாரினால் தமிழரசு வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கி.சேயோனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் தின நிகழ்வுகளுக்குத் தடை விதித்து வடக்கு கிழக்கு பூராகவும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்களைக் குறி வைத்து தடையுத்தரவு வழங்கும் படலம் பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக கடந்த 20ம் திகதி எனக்கும் காத்தான்குடி பொலிஸாரினால் தடையத்தரவு வழங்கப்பட்டது. இதில் விசேட அம்சம் என்னவெனில் இரவு வேளையில் வீட்டுக் கதவினைத் தட்டியும் இத்தடையுத்தரவுகள் கையளிக்கப்படுகின்றன என்பது தான்.
இத்தடையுத்தரவில் எனது பெயர் , நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உட்பட 12 பேரின் பெயர்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.


பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
