இராணுவத்தினரிடமிருந்து மீண்டும் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்ட பெட்டிகலோ கெம்பஸ் (Photos)
பல வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு ஜெயந்தியாயவில் அமைந்துள்ள “பெட்டிகலோ கெம்பஸ்” விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய பல்கலைக்கழத்திலிருந்து இராணுவத்தினர் இன்று (20.09.2023) வெளியேறியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (19.09.2023) முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கெம்பஸை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
பொறுப்பேற்ற ஹிஸ்புல்லாஹ்
அதற்கமைய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று நேரடியாக கெம்பஸுக்கு விஜயம் செய்து கெம்பஸை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கெம்பஸை பொறுப்பேக்கும் நிகழ்வில் கல்குடா அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.ஹாரூன் ஸஹ்வி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம். தாஹீர், மௌலவி மும்தாஸ் மதனி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.








Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
