மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு(Video)
மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நண்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கிய சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர் நேற்று(29) மாலை குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
செங்கலடி, ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த 15 வயதையுடைய ஜெகன் லதுஷன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுவன்
உயிரிழந்த சிறுவன் உள்ளிட்ட 5 பேர் நேற்று முன்தினம்(28)மாலை கடலில் நீராடச் சென்றுள்ள நிலையில் சிறுவன் கடலில் மூழ்கியுள்ளார்.
இவ்வாறு கடலில் மூழ்கிய சிறுவனை தேடும் பணிகள் சம்பவ தினத்திலிருந்து(28) தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை 7.00 மணியளவில் சிறுவனின் சடலம் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |