மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் பலி
மட்டக்களப்பு, வாகரை அருகே பனிச்சங்கேணி பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்றைய(26.05.2025) முன்னிரவில் நடைபெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களே பனிச்சங்கேணி பாலத்தில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
ஓட்டமாவடி பதுரியா நகர் ஆலையடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் மற்றும் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தற்போது உயிரிழந்த வாலிபர்களின் சடலங்கள் வாகரை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடும் ரஷ்யா: மத்திய கிழக்கில் காத்திருக்கும் ஆபத்தான நாட்கள் News Lankasri
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam