மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 63 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் - மூவர் மரணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 63 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3 மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 14 நாட்களில் ஆரையம்பதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் 42 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை மற்றும் வவுணதீவு நாவற்காடு வைத்தியசாலைகளில் கோவிட் சிகிச்சைப் பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையில் தொடர்ச்சியாக கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருவதாகவும், அதன் காரணமாக அங்கு சென்று இன்று நிலைமைகளை அவதானித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் வேலை முடிந்து சென்றவர்களின் ஒரு
பேருந்தில் சென்றவர்கள் வவுணதீவு பகுதியில் அன்டிஜன்
பரிசோதனைக்குப்படுத்தப்பட்டபோது அதில் சென்றவர்களில் 10தொற்றாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.