மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 46 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் சிறைக் கைதிகள் 8 பேர் உட்பட 46 பேருக்குத் தொற்று உறுதியானதை அடுத்து மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1833 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், களுவாஞ்சிக்குடி மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் 2 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும், ஒட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும், வவுணதீவு மற்றும் கிரான் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 2 பேர் வீதம் 4 பேரும் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டனர்.
மேலும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும், ஏறாவூர் மற்றும் பட்டிருப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 3 பேர் வீதம் 6 பேர் உட்பட 46 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் முடக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவான சின்ன ஊறணி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) 155 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த கிராம சேவகர் பிரிவில் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து அந்த பகுதி கடந்த 18 ம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை
(23) முடக்கப்பட்ட அந்த பகுதியிலுள்ள 155 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டது இதில் 14 பேருக்கு கோவிட் தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 32380 பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 22 மரணங்கள் இடம்பெற்றுள்ளது.எனவே பொது மக்கள் வீட்டை விட்டு முடிந்தளவு வீதிக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கோவில்குளத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் இன்றைய தினம் 12 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri