மட்டக்களப்பில் நேருக்கு நேர் மோதிய பேருந்து - லொறி!
மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று (26) காலை சுமார் 10.30 மணியளவில் தனியார் பேருந்தும் சிறிய ரக லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
ஆரையம்பதியில் இருந்து கதுருவெல நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிஸ்கட் ஏற்றி சென்ற லொறியும், சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோட்டு பகுதியில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பேருந்து நடத்துனர் உள்ளிட்ட பேருந்தில் பயணித்தவர்களும், லொறியில் சென்றவரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த 5 பேரும் சித்தாண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam