வட் வரி செலுத்தத் தவறிய விவகாரம்! கொழும்பு மாநகர சபைக்கு எதிராக வழக்குப் பதிவு
பெறுமதிசேர் வரியை (VAT) செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு மாநகர சபைக்கு (CMC) எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு மாநகர சபை அரசாங்கத்திற்குச் செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் 1,034 ரூபா மில்லியன் பெறுமதிசேர் வரியை (VAT)) வசூலிக்க உத்தரவு கோரி, உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
வழக்குப் பதிவு
உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் கொழும்பு மாநகர சபை பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையிலான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஒஷத மிகார மகாராச்சியின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.