மட்டக்களப்பு மாவட்ட சிறுபோக வேளாண்மை விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வயலில் படிந்துள்ள மண்ணை அகற்றி சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கு உதவுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள வேத்துச்சேனை சின்னவர் வயற் கண்டத்திலுள்ள சுமார் 250 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களில் கடந்த மழைவெள்ளத்தில் அள்ளுண்டு வந்த மண் சுமார் 3 அடி உயரத்தில் படிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோரிக்கை
இந்தநிலையில், தற்போது மேற்கொள்ளவுள்ள சிறுபோக வேளாண்மைச் செய்கையை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும், தமது வயலில் இயற்கையாகவே கடந்த மழை வெள்ளத்தினால் உடைப்பெடுத்து படிந்துள்ள மண்ணை அகற்றப்படும் பட்சத்திலேயேதான் தாம் இம்முறை சிறுபோக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட முடியும் எனவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே பரம்பரை வாழ்வாதார தொழிலான வேளாண்மைச் செய்கையில் வேத்துச்சேனை சின்னவர் வயற்கண்டத்திலுள்ள விவசாயிகளான தாம் எதிர்கொண்டிருக்கும் இப்பிரச்சினைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
