கோட்டாபாயவுடன் மோசடி வழக்கில் சிக்கிய முன்னணி பாடகர்கள்
‘வெராஸ் நதி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் கொள்முதல் செயல்முறையை மேற்கொள்ளாமல் செலவிடப்பட்டதாக கூறப்படும் வழக்கில் இலங்கையின் முன்னணி பாடகர்களான பாத்தியா மற்றும் சந்தோஷை சந்தேக நபர்களாகப் பெயரிடுமாறு சட்டத்தரணி நுவான் ஜெயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் விடயத்தை கூறியுள்ளார்.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு 27.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ச
மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் சந்தேக நபராகப் பெயரிடுமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்துள்ளதாகவும், மேலும் நகர மேம்பாட்டு ஆணையம் அவரது கீழ் இருந்தது என்றும் நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டாவது சந்தேக நபராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட எம்.ஏ. ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதிரவின் சார்பாக சட்டத்தரணி நுவான் ஜெயவர்தன நீதிமன்றத்தில் முன்னிலையாகி மேற்கண்ட விடயங்களை முன்வைத்துள்ளார்.
வெராஸ் நதி திட்டத்தின் முதல் கட்ட திறப்பு விழாவிற்கு முறையான திட்டமிடல் செயல்முறையைப் பின்பற்றாமல் அரசாங்க நிதியை செலவிட்டதற்காக, காணி மீட்பு மற்றும் மேம்பாட்டுக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது மேலாளர், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.
வெராஸ்நதி திட்டத்தின் முதல் கட்ட திறப்பு விழாவிற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை என்றாலும், கொள்முதல் செயல்முறை இல்லாமல் திட்டத்திற்கு 2.76 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் உதவி சட்ட இயக்குநர் சட்டத்தரணி சுலோச்சனா ஹெட்டி ஆராச்சி ஆதாரங்களை நீதிமன்றுக்கு முன்வைத்துள்ளார்.
பாத்தியா மற்றும் சந்தோஷ்
இந்நிலையில், உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக நிறுவனத்தின் இரண்டு முன்னாள் பொது மேலாளர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியதன் பின்னர், தனது கட்சிக்காரர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும், சட்டத்தரணி நுவான் ஜெயவர்தன நீதிமன்றத்திற்கு இதன்போது தெரிவித்திருந்தார்.
இந்த திட்டம் செப்டம்பர் 9, 2014 அன்று திறக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், கொள்முதல் செயல்முறையை மேற்கொள்ள 2014 செப்டம்பர் 5 ஆம் திகதி கொள்முதல் செயல்முறையின் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச திட்டத்தைப் பார்ப்பதற்காக ஒத்திகைகளை கூட நடத்தியதாகவும், அத்தகைய சூழ்நிலையில் தனது கட்சிக்காரர் மிகுந்த அழுத்தத்தின் கீழ் செயல்பட்டதாகவும் நுவான் ஜெயவர்தன கூறியுள்ளார்.
மேலும் இந்த திட்டத்தில் பாத்தியா மற்றும் சந்தோஷ் பயணடைந்தார்கள் எனவும் அறிவித்துள்ளார்.





அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
