இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு தொகுதி பொருட்கள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் இருந்து படகில் ஏற்றி கொண்டிருந்த 1600 கிலோ பீடி இலை பண்டல்கள் மீட்கப்பட்டுள்ளதோடு கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் படகு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்த திருப்புல்லாணி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கை அருகே இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, கடல் அட்டை, சமையல் மஞ்சள், பீடி இலை பண்டல்கள், ஐஸ் போதை பொருள், ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.

இந்த கடத்தல் சம்பவங்களை தடுக்க இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் கடற்படையினர் மற்றும் கடலோரப் பகுதிகளில் மத்திய, மாநில உளவுத்துறை, மரைன் பொலிஸார், சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்புல்லாணி காவல் ஆய்வாளருக்கு திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக பீடி இலை பண்டல்கள் கடத்த இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் இன்று அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சரக்கு வாகனங்களில் இருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை பண்டல்களை ஏற்றி கொண்டிருந்ததை கண்ட பொலிஸார் அவர்களை மடக்கி பிடித்து 37 மூட்டைகளில் இருந்து 1600 கிலோ பீடி இலை பண்டல்கள் வாகனம் மற்றும் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மூவரையும் கைது செய்து திருப்புல்லாணி பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புல்லாணி பொலிஸாரின் விசாரணைக்கு பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம், பைபர் படகு மற்றும் பீடி இலை பண்டல்கள் கீழக்கரை சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan