மிகப் பாரதூரமான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்தப் போகும் பட்டலந்த விவகாரம்! அநுர தரப்புக்கும் ஆபத்து
தற்போது வெளிக்கிளம்பியிருக்கும் பட்டலந்த வதை முகாம் விவகாரம் மிகப் பாரதூரமான அரசியல் வாக்குவாதங்களை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் காணப்படுவதாக அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீத பொன்கலன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தரப்பும், ரணில் விக்ரமசிங்கவின் தரப்பும், ஜேவிபிக்கு எதிரான பாரதூரமான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்தில் முன்கொண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பட்டலந்தை வதை முகாம் நடத்தப்பட்ட காலப் பகுதியில் தலைவராக இருந்தவர் ரணசிங்க பிரேமதாச என்பதால், பட்டலந்த விவகாரத்தின் தாக்கம் நிச்சயமாக சஜித் பிரேமதாசவிற்கும் இருக்கும்.
ரணில் விக்ரமசிங்க அந்த அரசாங்கக் காலத்தில் இருந்த மிகச் சிறிய நபர் தான். ஆனால் அதன் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தை ரணசிங்க பிரேமதாச.
எனவே, எதிர்வரும் நாட்களில் அநுர அரசாங்கத்திற்கு எதிரான, பாரதூரமான குற்றச்சாட்டுக்களை எதிர்தரப்பு அரசியல்வாதிகள் முன்வைக்கும் வாய்ப்புக்கள் அதிகம் எனவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.