மஹிந்த - கோட்டாபயவை இயக்கும் பசில்! மத்திய வங்கியின் ஆளுநரை தவிர்க்க காரணம் என்ன?
பசில் ராஜபக்சவே இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்கிறார். அவருக்கு ஏற்றால் போன்றே ஜனாதிபதியும், பிரதமரும் செயற்படுவது போன்று தெரிகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மத்திய வங்கியின் ஆளுநர் என்ற அடிப்படையில் அஜித் நிவாட் கப்ரால் ஒன்பது முறை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் பேச்சுவார்த்தைக்கு நேரம் கோரியுள்ளார். இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்காவது பேச்சுவார்த்தைக்கு அனுமதித்திருக்க வேண்டும்.
நாட்டிலுள்ள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின் கலந்துரையாடல் நடத்தப்படவேண்டியது அவசியம்.
அவ்வாறு இருக்கையில், அனுபவம் நிறைந்த மத்திய வங்கியின் ஆளுநர் பேச்சுவார்த்தையினைக் கோரியும் கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்காமைக்கு காரணம் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிதி அமைச்சருக்கு இல்லை.
பசில் ராஜபக்ச மீது குற்றம் இருப்பதாலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அவரைப் பற்றி தெரிந்த சகலரும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள். நாங்கள் மக்களையே நம்புகிறோம்.
கடந்த நல்லாட்சி காலப்பகுதியிலும் எங்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றிருந்தன. அவ்வாறு மீண்டும் இடம்பெறக் கூடும்.
அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் அதுவே அரசாங்கத்தின் இறுதிக் கட்டமாக இருக்கும். எதற்கும் நாங்கள் அஞ்சமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
விமானத்தில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநருடன் கைகுலுக்கிய அபுதாபி இளவரசர்: வைரல் வீடியோ News Lankasri