பசில் இன்னும் கையொப்பமிடாத வர்த்தமானி
இரசாயன பசளைகளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதியளிக்கும் வர்த்தமானியில் இலங்கையின் நிதியமைச்சர் இன்னும் கையொப்பமிடாத காரணத்தினால், இரசாயன பசளைகள் விவசாயிகளைச் சென்றடைவதில் மேலும் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், நிதியமைச்சரின் வர்த்தமானி கையொப்பத்துக்காக இன்னும் காத்திருப்பதாக திறைசேரியின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி வெள்ளிக்கிழமைக்குள் நிதி அமைச்சின் ஊடாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
விவசாயிகளின் பரவலான எதிர்ப்புகள் மற்றும் காய்கறி விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக, அரசாங்கம் பசுமை விவசாயக் கொள்கையை மாற்றி, இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை தனியார் துறை இறக்குமதி செய்வதற்கான அறிவிப்பை கடந்த புதன்கிழமை வெளியிட்டது.
இதன்படி ஏற்கனவே கடந்த மே 6ஆம் திகதி அப்போதைய நிதியமைச்சரான மஹிந்த ராஜபக்ச, இரசாயனப் பசளைகளின் இறக்குமதியை ரத்துச்செய்வதற்காக வெளியிட்ட வர்த்தமானிக்கு பதிலாக இறக்குமதிக்கு அனுமதிக்கும் வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.


ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
