இன்று பதவியேற்கிறார் பசில்! சூடுபிடிக்கும் அரசியல் களம்
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில் அரசியல் மட்டத்திலும் அதற்கு அப்பாலும் பசில் ராஜபக்சவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சரிவை சந்தித்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு பசில் ராஜபக்சவின் இந்த மீள் பிரவேசம் அவசியம் என அரச தரப்பு பிரச்சாரம் செய்து வருகின்ற நிலையில் அதற்கு எதிராகவும் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
இந்த நிலையில் பசில் ராஜபக்சவின் மீள் பிரவேசம் தொடர்பான விரிவான தகவல்களுடனும் இன்றைய நாளேடுகளில் இடம்பிடித்த முக்கிய செய்திகளையும் சுமந்து வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் விசேட தொகுப்பு,