இரட்டைக் குடியுரிமையை கைவிடத் தயார்! பசிலின் அடுத்தக் கட்ட நகர்வு
அமெரிக்க குடியுரிமையை கைவிடத் தயார் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு இரட்டைக் குடியுரிமை தடையாக இருந்தால் அதனை கைவிடத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விடயங்களையும் விட்டுக் கொடுக்கத் தயார்
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தடையாக காணப்படும் அனைத்து விடயங்களையும் விட்டுக் கொடுக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
தாம் வெற்றியடைவதா இல்லையா என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி ரணில் பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எரிவாயு வெடிப்பு, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசை, பத்து மணித்தியால மின்வெட்டு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
