நெருக்கடியில் இருந்து மீள ஜப்பான் மற்றும் சீனாவின் பக்கம் திரும்பும் பசில்
நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வுகாண இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதை போன்ற நிவாரணப் பொதிகளை சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளவது தொடர்பான யோசனையை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச,(Basil Rajapaksa)அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.
10 பக்கங்களை கொண்ட இந்த யோசனையை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த தயார் எனவும் தெரியப்படுத்தியுள்ளார்.
இலங்கை தற்போது பெற்றுக்கொண்டுள்ள கடனில் 20 வீதமான கடன் ஜப்பான் மற்றும் சீனாவிடம் இருந்து பெறப்பட்டுள்ளதுடன் இந்த பேச்சுவார்த்தை மூலம் பெறப்பட்டுள்ள கடனை செலுத்துவதற்கான காலத்தை நீடித்துக்கொள்வது, செலுத்துவதற்கான நிவாரண காலத்தை பெற்றுக்கொள்வது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 25 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
