பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப உதவி! அமைச்சரவை அங்கீகாரம்!
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு, அமைச்சர் பசில் ராஜபக்ச, சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் Changyong Rhee தற்போது கொழும்பில் இலங்கை அரசாங்கத்துடன் சந்திப்பை நடத்தி வருகிறார்.
அவர் நேற்று நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினார். இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்திக்கிறார்.
இதன்போது நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் குறித்த தமது மதிப்பீட்டை அவர் விளக்கவுள்ளார்.





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
