பசில் ராஜபக்ச பதவி விலக மாட்டார்: பொதுஜன பெரமுண கட்சி வட்டாரங்கள் தெரிவிப்பு
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக மாட்டார் என்றே பொதுஜன பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்ச தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யவுள்ளதாகவும், அந்த வெற்றிடத்துக்குப் பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
பிரபல தொழிலதிபரின் கோரிக்கை
இந்நிலையில், அண்மையில் தொழிலதிபர் தம்மிக பெரேராவும் தனக்கு ஒரு அமைச்சுப் பதவி வழங்கினால் நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் வழியை அறிந்து வைத்திருப்பதாகத் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்தார்.
எனினும் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யமாட்டார் என்றே பொதுஜன பெரமுண கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
