பொதுஜன பெரமுன கட்சியின் கலந்துரையாடலில் குழப்பம்
2022 4ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கிராமங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் கிராம மட்ட செயற்பாடுகள் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று வவுனியா ஆனந்தி விடுதியில் இன்று (03) இடம்பெற்றுள்ளது.
அக்கட்சியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் கட்சியின் வவுனியா மாவட்ட பிரமுகர்களுடன் ஆதரவாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது ஜாதிக நிதஸ் பெரமுன கட்சியின் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.ஜே தர்மகீர்த்தி மற்றும் மகஜன எக்சத் பெரமுன கட்சியின் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உறுப்பினர் சம்பத் பியதுங்க ஆகியோர் கூட்டம் இடம்பெறும் இடத்திற்குச் சென்று தமக்கு கூட்டம் இடம்பெறுவது தொடர்பில் அறிவிக்கவில்லை என தர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் வெளியேறியுள்ளனர்.







ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
