தேர்தலுக்கு தயாராகும் பசில்! இலங்கை வருவதற்கு முன்னர் தனது ஆதரவாளர்களிற்கு தெரிவித்த விடயம் (Video)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச அமெரிக்காவில் ஒன்றரை மாதங்களைக் கழித்த பின்னர் இன்று நாடு திரும்பியுள்ளார்.
பசில் ராஜபக்சவின் இந்த வருகை என்பது வேறுவிதமான காரணங்களை கொண்டுள்ளது என அரசியல் பரப்பில் பேசப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன
பசில் ராஜபக்சவின் வருகையை உறுதிசெய்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தனது கட்சி தேர்தலிற்காக தயாராகின்றது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை வருகைக்கு முன்னதாக பசில் ராஜபக்ச உள்ளுராட்சி தேர்தலை மையமாக வைத்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கான ஊடக பிரச்சாரத்தை ஆரம்பிப்பது குறித்து தனக்கு நெருக்கமானவர்களுடன் பேசியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் பிரச்சாரம்
அச்சு இலத்திரனியல் ஊடகங்களில் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜேவிபியை விட வலுவானது என்பதை வெளிப்படுத்த விரும்புவதாக பசில் ராஜபக்ச நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பில் உள்ள தனது ஆதரவாளர்களிற்கு தெரிவித்துள்ளார்.
May you like this Video





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
