நாட்டை விட்டு வெளியேற பசில் ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிகள்!வெளிச்சத்துக்கு வந்துள்ள விபரங்கள்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, முக்கியஸ்தர்கள் முனையம் ஊடாக நாட்டை விட்டுவெளியேற முயற்சித்து, தோல்வி கண்டதை அடுத்து, அவர் விமானப் பயணச்சீட்டு கொள்வனவு செய்தமை தொடர்பான பல விபரங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் தகவலின்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) வோஷிங்டன் செல்வதற்காக அவருக்கு முதல் வகுப்பு கோல்ட் உறுப்பினர் அடுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது.
நாட்டை விட்டு வெளியேற மேற்கொண்ட முயற்சிகள்
EK-649 விமானத்திற்கான முன்பதிவு குறிப்பு PCR652 இன் கீழ் 2022, ஜூலை 11, அன்று டிக்கெட் வழங்கப்பட்டது. டிக்கெட் எண் 176 2349819160. டிக்கெட்டில் கொடுக்கப்பட்ட விபரங்களின்படி, கொழும்பில் இருந்து (CMB) துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) அவரது முதல் இலக்க்காகும்.
நேற்றிரவு (12) 00.15 மணிக்கு ஆவணப்பரிசீலனை (செக் இன்) நேரம் வழங்கப்பட்டு, இன்று அதிகாலை 3.15 மணிக்கு, விமானம் புறப்படவிருந்தது.
இரண்டாவது விமானம் துபாயில் இருந்து நேற்று மதியம் 02.25 மணிக்கு புறப்பட்டு இன்று காலை 8.45 மணிக்கு வோஷிங்டனில் உள்ள டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்தது.
விமான பயணங்களுக்கு செலவிடப்பட்ட தொகை
இந்த நிலையில், அதே விமான நிறுவனத்தில் 2023,மார்ச் 2, அன்று வோஷிங்டனில் இருந்து கொழும்பை அடைய மற்றொரு டிக்கெட் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான கட்டணமாக, 5.3 மில்லியன் ரூபா (5,302,700) ரொக்கமாகச் செலுத்தப்பட்டது, இது Flex Plus கட்டணமாகும். Flex Plus கட்டணம் என்பது முற்றிலும் நெகிழ்வான மற்றும் கட்டுப்பாடற்ற கட்டணமாகும்.
எமிரேட்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள டிக்கெட் கட்டணங்களின்படி, சில கட்டணங்கள் 5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருப்பதைக் காணலாம். இருப்பினும், நாணய மதிப்பீட்டின் அடிப்படையில் டிக்கெட் கட்டணம் நாளுக்கு நாள் மாறுபடும்.
எனவே நேற்றைய எமிரேட்ஸ் முதல் வகுப்பு டிக்கெட் கட்டணம் 5.3 மில்லியனுக்கும்(50 லட்சம்)அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதி நெருக்கடி! கோட்டாபயவின் முக்கிய முடிவு பாதுகாப்புச் செயலாளரிடம் |

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நடிகர் விஜய்யுடன் முற்றிய சண்டை: விஜய்யை கடைசியாக எச்சரித்த மனைவி..! விவாகரத்து செய்வது உண்மையா? Manithan
