இலங்கை மக்களை ஏமாற்றிய பசில் - டுபாயில் பதுங்கியிருப்பதாக தகவல்
அமெரிக்கா செல்வதாக அறிவிக்கப்பட்ட பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச டுபாயில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசேட பணிக்காக பசில் ராஜபக்ச டுபாய் சென்றதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயணம் தொடர்பில் வெளியான தகவல்
பசில் ராஜபக்சவின் பயணம் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எனினும் இன்னும் சில நாட்களில் பசில் ராஜபக்ச இலங்கை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
கட்சிக்குள் முரண்பாடுகள்
பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையினால், பசில் ராஜபக்ச அமெரிக்கா செல்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அடுத்த தேர்தலை இலக்கு வைத்து பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் பசில் ராஜபக்ச தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOW




