திருமண வீடுகளுக்கு செல்ல முடியாத பரிதாப நிலையில் பசில்
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ திருமண வீடுகளுக்கு உட்பட செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதனால் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மக்கள் எதிர்ப்பு வெளியிட கூடிய அனைத்து இடங்களிலும் எதிர்ப்பு வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பசிலுக்கு எதிர்ப்பு வெளியிடும் இசை நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது. அதன் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அங்கு “கப்புட்டு காக்கா... பசில்.. பசில்...” என திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும் பாடியுள்ளனர்.
இதனால் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ திருமணம் நிகழ்வு மற்றும் முக்கிய இடங்களுக்கு செல்வதனை தவிர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri