மகிந்த மற்றும் பசிலுக்கெதிரான வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை இனி நடைமுறையில் இல்லை என்று உயர் நீதிமன்றம் இன்று (22.03.2023) உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சேவை பெறுநர்களுக்குரிய பயணத்தடை நீடிக்கப்படவில்லை
மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பன, நீதிமன்றில் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதிக்குப் பின்னர் தமது சேவை பெறுநர்களுக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் நீடிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இதைக் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், பிரதிவாதிகள் இருவருக்கும்
விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை இனி நடைமுறையில் இல்லை என்பதைக் குடிவரவு
மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்குத் தெரிவிக்குமாறு உயர் நீதிமன்றப்
பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் 23 மணி நேரம் முன்

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

ஐபிஎல் இறுதிப்போட்டி மாற்றம்... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் News Lankasri

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! நிரூபர்களுக்கு அளித்த நக்கலான பதிலால் சர்ச்சை Manithan
