மொட்டு கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் அவசரமாகக் கொழும்புக்கு அழைப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கூட்டம் நெலும்மாவத்தையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (02.02.2023) பசில் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் வாக்கெடுப்புக்கள்
இந்நிலையில், உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கெடுப்பு, இந்த மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இடம்பெறக்கூடும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து, எதிர்வரும் வாரங்களில், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்
என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
