கண்டியில் இருந்துக் கொண்டு கொழும்பு அரசியலில் மாற்றம் ஏற்படுத்திய பசில்
கடந்த வாரம் கொழும்பு அரசியல் சூடுபிடித்த போது, பொதுஜன பெரமுனவின் மூளையாகக் கருதப்படும் பசில் ராஜபக்ச, வெப்பத்திலிருந்து தப்பிக்க மலையக பக்கம் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் மகனின் திருமணம் கடந்த வாரம் இடம்பெற்றதுடன், மணமகன் தரப்பிலிருந்து கையொப்பமிடுவதற்கு பசில் பொறுப்பேற்றார்.
அதற்கமைய, பசில் கடந்த சனிக்கிழமை தனது மனைவி புஷ்பதாவுடன் கண்டிக்கு சென்று அங்கு சில நாட்கள் ஓய்வெடுத்து திருமண வைபவத்தில் கலந்து கொண்டார்.
பசில் தனது ஓய்வைக் கழிப்பதற்காக ஹந்தான பகுதியில் ஒரு அழகான பங்களாவைத் தேர்ந்தெடுத்திருந்தார். அதற்கமைய, பசில் அந்த நாட்களை தனக்கு மிகவும் நெருக்கமான இரண்டு நண்பர்களையும் அழைத்து சென்றுள்ளார்.
எப்படியிருப்பினும், ஹந்தானையில் தங்கியிருந்த சில நாட்களில் அரசியலில் ஈடுபடாமல் இருந்த போதிலும், பசில் பாரிய அரசியல் திட்டத்தை தயாரித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பசில் ஹந்தானையில் இருந்தே கொழும்பில் உள்ள பல பலமான அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் சார்ள்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் பசில் செயற்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனினும் இதுவரையில் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியாகியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 44 நிமிடங்கள் முன்
அறிவுக்கரசிக்கு தரமான பதிலடி கொடுத்த ஈஸ்வரி, ஷாக்கில் கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam